வடகொரியாவில் கொரோனா அச்சம்

பியோங்யாங்: வடகொரியாவில் முதல்முறையாக கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அந்நாடு சந்தேகம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரியாவுக்குத் தப்பி ஓடிய வடகொரியர் ஒருவர் கடந்த வாரம் நாடு திரும்பியதாக வடகொரிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்தது.

அந்த நபரிடம் கொரோனா கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தென்கொரியாவுடனான எல்லைப் பகுதியில் உள்ள கேசோங் நகரத்தில் வடகொரியா முடக்கநிலையை அறிவித்துள்ளது.