மகாதீர் ஏமாற்றியது இப்போது புரிகிறது: அன்வார் இப்ராகிம்

2 mins read
97acdfea-88e6-494d-bbee-5ac23ec59a89
மகா­தீ­ரால் பல­முறை ஏமாற்றப்­பட்­ட­தாக பிகே­ஆர் கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­கிம் வேத­னை­யோடு கூறி­யுள்­ளார். படம்: எஸ்பிஎச் -

கோலா­லம்­பூர்: பிர­த­மர் பதவி ஒப்­ப­டைக்­கப்­படும் எனக் கூறி தாம் டாக்­டர் மகா­தீ­ரால் பல­முறை ஏமாற்றப்­பட்­ட­தாக பிகே­ஆர் கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­கிம் வேத­னை­யோடு கூறி­யுள்­ளார்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பிர­த­மர் பத­வியை டாக்­டர் மகா­தீர் தம்­மி­டம் ஒப்­ப­டைப்­பார் என தாம் உறு­தி­யாக நம்­பி­ய­தாக அவர் சொன்­னார்.

"தொடக்­கத்­தில் இது எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை, ஆனால் இப்­போது புரி­கிறது," என மலே­சி­யா­வின் 'சின் சியூ' சீன நாளி­த­ழுக்­குப் பேட்டி அளித்த அன்­வார் கூறினார்.

"பிர­த­மர் பத­வியை ஒப்­ப­டைக்­கப்­போ­வ­தா­கக் கூறும் தேதியை டாக்­டர் மகா­தீர் மாற்­றிக்­கொண்டே இருந்து இறு­தி­யில் இவ்­வாண்டு நவம்­பர் நடை­பெ­ற­வி­ருக்­கும் ஆசிய பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு மாநாட்­டிற்­குப் பிறகு பதவி வில­கப் போவ­தாக சொன்­னார்.

"ஆனால், பக்­கத்­தான் ஹரப்­பான் தலை­வர்­க­ளி­டம் தெரி­விக்­கா­ம­லேயே பிப்­ர­வரி 24ஆம் தேதி டாக்­டர் மகா­தீர் பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­னார்.

"22 மாதங்­கள் நீடித்த பக்­கத்­தான் ஹரப்­பான் ஆட்சி கவிழ்­வ­தற்கு இதுவே முக்­கிய கார­ண­மாக அமைந்­தது.

"அதோடு பத­வியை ஒப்­ப­டைப்­ப­தற்­கான வாக்­கு­று­தி­யும் காற்­றில் பறந்­தது," என அன்­வார் ஏமாற்­றத்­தோடு தெரி­வித்­தார்.

"டாக்­டர் மகா­தீர் பதவி வில­கா­மல் இருந்­தி­ருந்­தால் பக்­கத்­தான் அர­சாங்­கம் இன்­ன­மும் தொடர்ந்து இருந்­தி­ருக்­கும். உட்­கட்­சிப் பூச­லை­யும் சரி செய்­தி­ருக்க முடி­யும்.

"பிர­த­மர் பத­வியை தம்­மி­டம் ஒப்­ப­டைத்­தி­ருந்­தா­லும் அர­சாங்­க­ம் கவிழ்ந்­தி­ருக்­காது," என்­றும் அவர் சொன்­னார்.

"பிகே­ஆர் மற்­றும் பெர்­சத்­து­வில் துரோ­கி­கள் உள்­ள­னர் என்­பது உண்மை. ஆனால் அந்த சூழ்­நி­லையை நாம் ஏன் உரு­வாக்­கி­னோம்.

"நான் மக்­கள் நல­னில் அக்­கறை கொண்­டுள்­ளேன். ஏழை­க­ளி­ட­மி­ருந்து திரு­டு­வோரை நான் வெறுக்­கி­றேன், " என்று அன்­வார் கூறி­னார்.

தமது குறிக்­கோள் பொரு­ளி­ய­லைப் பற்­றி­ய­து­தான் எனத் தெரி­வித்த திரு அன்­வார், அனை­வ­ரும் வெற்­றி­ய­டை­யலாம் என்­றும் சீன வர்த்­த­கர்­கள் உள்­ளிட்ட திற­மை­யா­ன­வர்­கள் அனை­வ­ரை­யும் ஆத­ரிக்­க­வேண்­டும் என்­ற நிலைப்­பாடு கொண்­டுள்­ள­தாகவும் கூறி­னார்.