மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்பு; தண்டனையை அதிகரிக்கும் மலேசியா

மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்பு; தண்டனையை அதிகரிக்கும் மலேசியா

1 mins read
04fa44fb-2a8b-4fb7-9df2-5c2f72ab638b
‌ஷாஆலம் பகுதியில் உள்ள மத்திய விரைவுச்சாலை. படம்: மலேமெயில், மீரா ஸுல்யானா -

கோலா­லம்­பூர்: சாலை போக்­கு­வ­ரத்து சட்டத் திருத்த மசோதா முதல் வாசிப்­புக்­காக நேற்று மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ கா சியோங், இந்த திருத்த மசோ­தாவை மக்­க­ள­வை­யில் தாக்­கல் செய்­தார்.

மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்டி மற்­ற­வ­ருக்­குக் காயம் மற்­றும் உயி­ரி­ழப்பை ஏற்­ப­டுத்­தும் வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு கடும் தண்­ட­னையை விதிப்­ப­தற்கு இந்த சட்ட திருத்த மசோதா வழி­வகை செய்­கிறது.

அதோடு தொடர்ந்து இக்­குற்­றத்­தில் ஈடு­ப­டு­வோ­ருக்­கான தண்­டனை மற்­றும் அப­ரா­தத்­தை­யும் இந்த திருத்­தம் அதி­க­ரிக்­கிறது.

கவ­னக்­கு­றை­வாக வாக­னம் ஓட்டி மர­ணத்தை ஏற்­ப­டுத்­தி­னால் ஏற்­கெ­னவே உள்ள இரண்டு ஆண்டு சிறைத் தண்­டனை இப்­போது குறைந்­த­பட்­சம் 5 ஆண்­டு­கள் வரை அதி­க­ரிக்­கப்­படும். அதோடு 20,000 ரிங்­கிட்­டாக இருக்­கும் அப­ரா­தம் 50,000 ரிங்­கிட்­டாக அதி­க­ரிக்­கப்­படும்.

அடுத்­த­டுத்து இதே குற்­றங்­க­ளைப் புரி­வோ­ருக்கு 10 ஆண்­டு­கள் முதல் 15 ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும்.

50,000 முதல் 100,000 ரிங்­கிட் வரை அப­ரா­தத் தொகை அதி­க­ரிக்­கும்.

மேலும் வாகன ஓட்­டு­நர் உரி­மம் மூன்று முதல் ஐந்து ஆண்­டு­கள் வரை ரத்து செய்­யப்­ப­டு­வ­தற்­கும் மசோதா வழி வகுக்­கிறது.

இந்த மசோ­தா­வின் இரண்­டா­வது வாசிப்­பும் தற்­போ­தைய நாடா­ளு­மன்ற தொட­ரி­லேயே தாக்­கல் செய்­யப்­ப­டக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.