சீனா பதிலடி: செங்டூவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்

செங்டூ: சீனத் தூத­ர­கத்தை மூடு­வ­தற்­கான அமெ­ரிக்­கா­வின் நட­வ­டிக்­கைக்கு எதி­ரான சீனா­வின் பதி­ல­டி­யால் செங்­டூ­வில் உள்ள அமெ­ரிக்கத் துணைத் தூத­ர­கம் மூடப்­பட்டு அமெ­ரிக்­கக் கொடி நேற்று கீழே இறக்­கப்­பட்­டது.

அமெ­ரிக்­கத் தூத­ர­கம் அமைந்­துள்ள பகுதி போலி­சா­ரின் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. தூத­ர­கத்­தில் இருக்­கும் பொருட்­கள் உள்­ளிட்­ட­வற்­றைப் பார்க்க அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப், சீனா அமெ­ரிக்­கா­வின் அறி­வு­சார் சொத்­து­ரி­மையைத் திருட முயல்வ­தா­க குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார். இத­னைத் தொடர்ந்து ஹூஸ்­ட­னில் உள்ள சீன தூத­ர­கம் மற்­றும் சில சீன நிறு­வ­னங்­களை மூட அவர் உத்­த­ர­விட்­டார்.

அமெ­ரிக்­கா­வின் இந்த நட­வ­டிக்கை அனைத்­து­லக சட்­டம், சீன-அமெ­ரிக்கத் தூத­ரக மாநாட்­டின் விதி­மு­றை­களை அவ­ம­திப்­ப­தாகக் குறிப்­பிட்ட சீனா தனது நாட்­டில் உள்ள அமெ­ரிக்கத் துணைத் தூத­ர­கத்தை மூடி­யது.