கொரோனா கடனுதவி பணத்தில் கார் வாங்கியவர் கைது

நியூயார்க்: கிருமித்தொற்று காரணமாகப் பல தொழில்கள் முடங்கிஉள்ளதால், பல நாடுகள் வர்த்தகர்களுக்குக் கடனுதவிகள் வழங்கி வருகின்றன. அப்படி வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கடன் வாங்கிய ஒருவர் அந்த பணத்தைக் கொண்டு லம்போர்கினி கார் வாங்கிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

ஃபுளோரிடாவின் மயாமி நகரத்தைச் சேர்ந்த டேவிட் டி. கின்ஸ் என்ற 29 வயது ஆடவர், கொரோனா கால உதவியாகப் பெற்ற 4 மில்லியன் டாலர் (5.5 மில்லியன் வெள்ளி) கடன்தொகையைக் கொண்டு லம்போர்கினி கார் வாங்கியது உள்ளிட்ட பிற மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 70 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்றார் வழக்கறிஞர் ஒருவர்.