கார் நசுக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் புறநகரில் உள்ள தாமஸ்டவுன் பகுதியில் இயங்கிய கார் நசுக்கும் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதையும் மறைத்த கரும்புகை

யோடு கூடிய பெருந்தீயைக் கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒன்றுகூடிப் போராடினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ மூண்ட

போது கட்டடத்தின் உள்ளே பலர் இருந்ததாகவும் ஆனால் மீட்புக் குழுவினர் வருவதற்குமுன் அனைவரும் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

40 வயதுடைய ஒருவர் லேசான காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். படம்: இபிஏ