பிணைத் தொகை செலுத்தினார் நஜிப்

1 mins read
974b1130-fcb5-4d78-a1a8-5306ed860b7e
மலே­சிய முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக், 1 மில்­லி­யன் ரிங்­கிட் பிணைத் தொகையை செலுத்­தி­யுள்­ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

கோலா­லம்­பூர்: 1எம்­டிபி ஊழல் தொடர்­பான முதல் வழக்­கின் ஏழு குற்­றச்­சாட்­டு­களில் தண்­டனை பெற்ற மலே­சிய முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக், 1 மில்­லி­யன் ரிங்­கிட் பிணைத் தொகையை செலுத்­தி­யுள்­ளார்.

இதோடு தன் மீதான அனைத்து வழக்­கு­க­ளி­லும் பிணைத் தொகை­யாக நஜிப் இது­வரை 7 மில்­லி­யன் ரிங்­கிட் செலுத்­தி­யுள்­ளார்.

உயர்­நீ­தி­மன்ற தீர்ப்­புக்கு எதி­ராக அவர் மேல் முறை­யீடு செய்­துள்­ள­தால், தண்­ட­னையை தற்­கா­லி­க­மாக ஒத்தி வைப்­ப­தற்கு நீதி­பதி அனு­ம­தித்­தார். எனி­னும் பிணைத் தொகை­யாக 1 மில்­லி­யன் ரிங்­கிட் செலுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் அதி­கா­ரத்தை முறை­கே­டாக பயன்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டுக்கு நஜிப்­பிற்கு 12 ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் 210 மில்­லி­யன் ரிங்­கிட் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.

இதற்­கி­டையே, நஜிப் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கப்­பட்ட நீதி­மன்ற தீர்ப்பை இழி­வு­ப­டுத்­தும் முயற்­சி­யாக அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள், நீதி­பதி மொஹ­மட் நஸ்­லான் மொஹ­மட் கசாலி மீது கடும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ள­னர்.

நஜிப் நிதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது நிதி அமைச்­ச­கத்­தின் மூத்த அதி­கா­ரி­யாக இருந்த லோக்­மன் நூர் ஆடம், உயர்­நீ­தி­மன்­றம் 'அர­சி­யல் ரீதி­யி­லான முடிவை' எடுத்­துள்­ள­தாக குற்­றம் சாட்­டி­னார்.

நஜிப்­பின் தீவிர ஆத­ர­வா­ள­ரான அரசு சாரா அமைப்பை வழி­ந­டத்­தும் திரு ரமேஷ் ராவ் என்­ப­வர் நீதி­பதி நஸ்­லான் முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முக­ம­து­வின் பேரன் என்று கூறி­னார்.

ஆனால், இந்­தக் கூற்று முற்­றி­லும் அடிப்­ப­டை­யற்­றது என்று முக்­ரிஸ் மகா­தீர் மறுத்­துள்­ளார்.