சீனாவில் தொற்று அதிகரிப்பு

ஷாங்காய்: சீனாவில் நேற்று 101 கிருமித் தொற்று சம்பவங்கள் பதிவாகின. இது மூன்று மாதங்களில் அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாகும். அவற்றில் பெரும்பாலானவை ஸின்ஜியாங் மாநிலத்தோடு தொடர்புடையவை. இதைஅடுத்து, அங்கு உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபானக் கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன.