சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் முகக்கவசம்

மணிலா: கொரோ­னா­வுக்கு எதி­ரான போரில் அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணி­வது தவிர்க்க முடி­யாத ஒன்­றா­கி­விட்ட நிலை­யில், ஒரு­முறை மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­பட்டு தூக்கி எறி­யப்­படும் முகக்­க­வ­சங்­கள் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

செலவு பற்­றிய கவலை மற்­றும் புதிய பொருட்­கள் போது­மான அள­வுக்கு வலு­வா­ன­வையா என்­பது போன்ற கார­ணங்­க­ளால் பிளாஸ்­டிக்­கிற்­குப் பதில் மக்­கும் பொருட்­க­ளைப் பயன்­ப­டுத்த நிறு­வ­னங்­கள் தயங்­கு­கின்­றன.

இந்­நி­லை­யில், இரண்டு மாதங்­க­ளுக்­குள் மக்­கிப் போகக்­கூ­டிய வாழை நார் முகக்­க­வ­சம் பிலிப்­பீன்­சில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பிலிப்­பீன்­சில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில் அபக்கா எனப்­படும் நார் வகை­களில் செய்­யப்­படும் முகக்­க­வ­சங்­களில் என்95 முகக்­க­வ­சங்­க­ளை­விட அதிக ‘வாட்­டர் ரெஸிஸ்­டன்ட்’ எனப்­படும் நீர் எதிர்ப்­பு­டை­ய­வை­யாக உள்­ளது தெரிய வந்­துள்­ளது.

மேலும் சுற்­றுச்­சூ­ழ­லில் உள்ள அபா­ய­க­ர­மான துகள்­களை வடி­கட்­டக்­கூ­டிய துளை­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்ட வரம்­பிற்­குள் இருப்­ப­தை­யும் அது காட்­டி­யது.

அபக்கா வகை நார் ஏற்­கெ­னவே டீ பொட்­ட­லங்­கள், ரூபாய் நோட்­டு­களில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இதற்­கி­டையே, ஒரு­முறை மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­படும் முகக்­க­வ­சங்­க­ளின் விற்­பனை இவ்­வாண்­டில் 200 மடங்கு அதி­க­ரிக்­கும் என்று ஆய்வு ஒன்றை மேற்­கோள் காட்டி ஐநா வர்த்­தக கட்­டுரை கூறு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!