கிருமிப் பரவல் மையமாக மாறிய சிட்னி

சிட்னி: சிட்னி கொரோனா தொற்­றின் மைய­மாக உரு­வெ­டுத்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, அந்­ந­க­ரத்­து­ட­னான எல்­லையை குயின்ஸ்­லாந்து மாநி­லம் மூடு­கிறது.

மெல்­பர்­னில் இருந்து குயின்ஸ்­லாந்து சென்ற இரண்டு பெண்­க­ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து எடுக்­கப்­பட்­டுள்ள இந்த முடிவு வரும் சனிக்­கி­ழமை முதல் நடை­மு­றைக்கு வரும்.

குயின்ஸ்­லாந்து திரும்­பிய அவர்­கள் 14 நாள் தனி­மைப்­ப­டுத்­தும் உத்­த­ர­வைக் கடைப்­பி­டிக்க தவ­றி­விட்­ட­தா­க­வும் ஊர் திரும்­பிய எட்டு நாட்­க­ளுக்­குப் பிறகு அவர்­க­ளுக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

விக்­டோ­ரியா மாநி­லத்­தில் நேற்று 384, நியூ சவுத் வேல்­சில் 19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களும் பதி­வா­கின.

இதற்­கி­டையே, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள மெல்­பர்ன் நக­ரில் முதி­யோர் பரா­ம­ரிப்பு இல்­லங்­களில் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்­துள்­ளது.

எனவே, பேர­ழிவு மண்­ட­லங்களுக்கு அனுப்­பப்­படும் பாது­காப்பு மற்­றும் அவ­சர மருத்­து­வக் குழுக்­களை ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் மெல்­பர்ன் நக­ருக்கு அனுப்­பி­யுள்­ளது.