வியட்னாமில் கிருமிப் பரவும் அபாயம் அதிகம் உள்ளது

ஹனாய்: நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் நகரத்திலும் கொரோனா கிருமித்தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக வியட்னாம் பிரதமர் நுயேன் ஜுவான் ஃபுக் சொன்னதாக, உள்ளூர் ஊடகமான விடிவி தெரிவித்துள்ளது.

“கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நாம் இன்னும் விரைவாகவும் கடுமையாகவும் செயல்பட வேண்டும்,” என்று சொன்ன அவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் வியட்னாமில் காணப் பட்ட கிருமிப் பரவல் சம்பவங்களைவிட தற்போதையை நிலை வித்தியாசமாக உள்ளதாகவும் அவர் சொன்னார்.

வியட்னாமின் பிரபல சுற்றுலாத் தளமான டானாங்கில் கடந்த வாரம் கிருமித்தொற்று உறுதி செய்யப் பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து சுமார் 80,000 பேரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அந்நகரத்தில் கடுமையான முடக்க உத்தரவு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.