கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்குப்பின் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு கட்டுமானம், விவசாயம் மற்றும் தோட்ட துறை ஆகிய மூன்று துறைகளில் மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்வற்கு அனுமதிக்கப்படுவர் என மனித வள துணையமைச்சர் அவாங் சோலாஹூடின் தெரிவித்தார்.
இதர துறைகளில் உள்ள வேலை வாய்ப்புக்களில் உள்ளூர் தொழிலாளர்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் 4,542 நிறுவனங்கள் மூடப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ரோசோல் வஹிட் தெரிவித்தார்.

