புத்ராஜெயா: கெடாவில் குபாங் பாசு வட்டாரத்தில் 73 பாலர் பள்ளிகள் மற்றும் 3 மழலையர் பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. கெடாவின் கிருமித்தொற்று குழுமமாக அறிவிக்கப்பட்ட சிவகங்கா விலிருந்து வந்தவர் மூலமாக குபாங் பாசு மாவட்டத்தில் கொவிட்-19 பரவியதைத் தொடர்ந்து அந்த பாலர் பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனிடையே நேற்று புதிதாக 13 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 8 பேரும் உள்நாட்டில் ஐவரும் தொற்றுக்கு ஆளாகினர். இந்நிலையில் கிருமிப் பரவல் அதிகரித்தால் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்படும் என்றார் சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் நூர் ஹிஸாம்.
கெடாவில் கிருமிப் பரவல்; பாலர் பள்ளிகள் மூடப்பட்டன
1 mins read
கோப்புப்படம்: பெர்னாமா -

