‘வறுமை ஒழிப்பில் பின்னோக்கி செல்லக்கூடும்: ஐநா எச்சரிக்கை

ஜகார்த்தா: கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட சமூக-பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் உள்ள தென்கிழக்கு ஆசியா, வறுமை ஒழிப்பில் பல பத்தாண்டுகள் பின்னோக்கி செல்லக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

“இந்த நெருக்கடி தென்கிழக்காசியாவில் 218 மில்லியன் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப்  பாதிக்கும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இரண்டாவது வருமானம், சேமிப்பு இல்லாத தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் வறுமையில் தள்ளப்படுவார்கள். இது வறுமை ஒழிப்பில் பல பத்தாண்டுகள் பின்னோக்கி தள்ளும்,” என்கிறது ஐநா.

அதுபோல் வெளிநாடுகளில் பணிபுரியும் தென்கிழக்காசிய தொழிலாளர்கள் பணம் அனுப்பும் விகிதமும் 13 விழுக்காடு குறையும் என்றும் அது கூறுகிறது.