கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா கடும் நடவடிக்கை

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்துக் கொண்டே இருக்­கிறது. எனவே கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான புதிய கட்­டுப்­பா­டு­களை வரை­யறுக்­கும் நோக்­கில் விரி­வான பகுப்­பாய்­வைத் தொடங்­கி­

இ­ருக்­கிறது ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம்.

அந்த வகை­யில், கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான ஒவ்­வொ­ரு­வ­ரின் வீட்­டிற்­கும் சென்று தற்­காப்பு படை­யி­னர் மற்­றும் சுகா­தார அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­னர். அப்­போது தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் நான்­கில் ஒரு­வர் அங்­கு இல்­லா­தது தெரிய வந்­தது.

அவர்­க­ளைப் பற்­றிய விவ­ரங்­களை போலி­சா­ரி­டம் தெரி­வித்­துள்­ள­தா­க­வும், மேலும் அவர்­க­ளுக்கு 1,652 ஆஸ்­தி­ரே­லிய டாலர் (S$ 1,626) அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம் என்றும் அம்­மா­நில தலை­வர் ஆண்ட்­ரூஸ் கூறி­னார்.

இது­பற்றி பேசிய ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன், “மெல்­பர்­னில் கிரு­மித்­தொற்­றின் சமூ­கப் பர­வல் தொடர்ந்து சவா­லாக இருக்­கிறது. அங்கு செய்ய வேண்­டி­யது இன்­னும் நிறைய இருக்­கிறது,” என்­றார். அதோடு சிட்னி மற்­றும் நியூ சவுத் வேல்­சில் கிரு­மிப் பர­வல் கட்­டுக்­குள் இருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

“நியூ சவுத் வேல்­சில் பதி­வா­கும் ஒவ்­வொரு கிரு­மித்­தொற்று சம்­ப­வ­மும் எங்­கி­ருந்து தொடங்­கி­யது என்­ப­தைக் கண்­டு­பி­டிக்க முடி­கிறது. ஆனால் விக்­டோ­ரி­யா­வில் பதி­வா­கும் சம்­ப­வங்­களில் ஒவ்­வோர் நாளும் கிட்­டத்­தட்ட 50 சம்­ப­வங்­கள் எப்­படி தொற்­றி­யது என்­ப­தைக் கண்­டு­பி­டிக்க முடி­யா­மல் உள்­ளன,” என்றும் அவர் சொன்னார்.

நேற்று விக்­டோ­ரி­யா­வில் 627 சம்­ப­வங்­களும் நியூ சவுத் வேல்­சில் 14 சம்­ப­வங்­களும் பதி­வா­கின. ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இது­வரை 16,900 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கியுள்ளனர். அவர்களில் 60 விழுக்­காட்டினர் விக்­டோ­ரியா மாநி­லத்தைச் சேர்ந்தவர்கள். அதுபோல் 198 உயி­ரி­ழப்­பு­களில் பாதிக்­கும் மேற்­பட்­டவை விக்­டோ­ரி­யா­வில் நிகழ்ந்­தவை.