ஓராண்டுக்கு தேர்தலை ஒத்திவைத்தது ஹாங்காங்

ஹாங்­காங்: கிரு­மிப் பர­வல் அச்­சம் கார­ண­மாகத் தேர்­தலை அடுத்த ஆண்­டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதிக்குத் தள்ளி வைப்­ப­தாக ஹாங்­காங் தலை­வர் கேரி லாம் அறி­வித்­துள்­ளார்.

கிரு­மித்­தொற்று உச்­ச­ம­டைந்து வரு­வ­தால் இந்த கடி­ன­மான முடிவை எடுக்க நேர்ந்­த­தாக அவர் சொன்­னார்.

ஆனால், மக்­கள் வாக்­க­ளிப்­பதைத் தடுக்க, தொற்­று­நோயை அர­சாங்­கம் ஒரு சாக்­கு­போக்­கா­கப் பயன்­ப­டுத்­து­வ­தாக எதிர்க்­கட்சி குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

சீனா தேசிய பாது­காப்பு சட்­டத்­தைக் கொண்டு வந்­த­தை­ய­டுத்து, சட்­ட­மன்­றத்தை கைப்­பற்­றி­வி­ட­லாம் என்று எதிர் தரப்பினர் நம்­பிய நிலை­யில் இந்த முடிவு, அவர்­க­ளுக்கு ஏமாற்­றம் அளிக்­கும் வித­மாக அமைந்­துள்­ளது. ஜன­நா­யக சார்பு ஆத­ர­வா­ளர்­கள் 12 பேர் தேர்­த­லில் போட்­டி­யிட நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்­பி­டத்­தக்கது.