மணிலா: டிசம்பரில் வழக்கநிலை திரும்பும்

மணிலா: டிசம்பரில் வழக்கநிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்ட்டே. அதற்குள் சீனாவின் தடுப்பூசி வெளியாகிவிடும் என்றும் அவர் சொன்னார்.

மணிலா மற்றும் கிருமிப் பரவல் அதிகம் உள்ள இடங் களில் கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் மாத நடுப்பகுதிவரை நீட்டிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் சொன்னார்.

“டிசம்பர் மாதம் வரை பொறுமையாக காத்திருந்தால், நாம் புதிய இயல்பு நிலைக்குச் செல்ல வேண்டியதில்லை. மீண்டும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்புவோம்,” என்றார்.

கிருமிப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சில நகரங்களின் மருத்துவமனைகள் நோயாளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன. பிலிப்பீன்ஸில் இதுவரை 85,486 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,962 பேர் பலியாகினர்.