சீனாவில் சாதாரண சளிக்காய்ச்சல் பெருமளவு குறைந்தது

பெய்­ஜிங்: கிரு­மித்­தொற்று பர­வத் தொடங்­கிய பிறகு, பருவ காலத்தில் ஏற்படக்கூடிய சாதா­ரண சளிக்­காய்ச்­சல் நோய்­த்தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் விகி­தம் வெகு­வாக குறைந்­துள்­ள­தாக முதற்­கட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

கிரு­மித் தொற்­று­வ­தில் இருந்து தப்­பிக்க, கடைப்­பி­டிக்­கப்­படும் சமூக பாது­காப்பு இடை­வெளி கார­ண­மாக சளிக்­காய்ச்­சல் உள்­ளிட்ட மற்ற தொற்று நோய்­கள் பர­வு­வது எதிர்­பா­ராத வகை­யில் குறைந்­துள்­ளதை இது குறிக்­கிறது.

முதன்­மு­த­லாக கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­திய சீனா­வில் சளிக்­காய்ச்­சல் மட்­டு­மல்­லா­மல் தாளம்மை, தட்­டம்மை, பால்­வினை நோய்­கள் போன்­ற­வை­யும் குறிப்­பிட்ட அளவு குறைந்­துள்­ளன.

முடக்க உத்­த­ரவு நடை­மு­றைப்படுத்­தப்­பட்ட பிறகு, ஒவ்­வோர் மாத­மும் பதி­வா­கும் நோய்தொற்று­களின் விகிதம் 90 விழுக்­காட்­டிற்­கும் மேல் குறைந்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சரா­ச­ரி­யாக ஒரு மாதத்­திற்கு 290,000ஆக இருந்த அந்த எண்­ணிக்கை 23,000ஆக குறைந்­துள்­ளது.

அது­போல் கன­டா­வி­லும் எதிர்­பா­ராத அள­வுக்குக் குறை­வான எண்ணிக்கையில் சளிக்­காய்ச்­சல் பதி­வா­ன­தாக அந்­நாட்­டின் காய்ச்­சல் கண்­கா­ணிப்பு அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஆண்­டின் இதே கால­கட்­டத்­தில் இருந்­த­தை­விட நோய் தொற்றின் விகிதம் 83 விழுக்­காடு குறைந்­துள்­ள­தாக தென்­கொ­ரிய தொற்­று­நோய்­கள் மையத்­தின் அண்­மைய வார அறிக்கை கூறு­கி

றது. ஆனால் சளிக்­காய்ச்­சல் நோய்­தொற்று பெரு­ம­ளவு குறைந்­துள்­ளது சுகா­தார அமைப்­பின் மீதான அழுத்­தத்தைக் குறைத்திருந்தாலும், இனி­வ­ரும் பரு­வங்­களில் அது மனிதர்களின் நோய்­ எ­திர்ப்பு சக்தி தொடர்­பில் எதிர்­ம­றை­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று சுகா­தார நிபு­ணர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!