அக்டோபர் மாதத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்கத் தயாராகும் ரஷ்யா

கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வரும் அக்டோபர் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்க, ரஷ்யா திட்டமிடுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் மிகாயில் முராஷ்கோ கூறியதாக RIA செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு வழங்கப்படும் தடுப்பு மருந்து குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், மருத்துவர்கள், ஆசிரியர்களுக்குத்தான் முதலில் அந்தத் தடுப்பு மருந்து வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் அரசாங்க ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரஷ்யாவின் முதல் கொவிட்-19 தடுப்பு மருந்துக்கு, அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியை ஆகஸ்ட் மாதத்தில் பெற்று, பின்ன மருத்துவப் பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.