கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்குவதில் பணக்கார நாடுகள் முன்னணி

பணக்கார நாடுகள் ஏற்கெனவே ஒரு பில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்து டோஸ்களை வாங்குவதற்கு முன்னணியில் உள்ளன.

இதனால் நோய்க் கிருமியைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சியில் மற்ற நாடுகள் பின்னால் உள்ளது கவலையை எழுப்பியுள்ளது. 

சனோஃபி மற்றும் கிளாக் சோஸ்மித்க்லைன் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கான  ஒப்பந் தம் தொடர்பில் அமெரிக்காவும் பிரிட்டனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

அதுபோல் ஜப்பானுக்கும் ஃபைசர் நிறுவனத்திற்கும் இடையிலும் ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

தடுப்பு மருந்தின் செயல்பாடு பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே அவற்றை வாங்க ஐரோப்பிய ஒன்றியமும் முண்டியடிப்பதாகத் தகவல்.

பல நாடுகள் மலிவு விலையில் தடுப்பூசி தயாரிப்பதாக உறுதி அளித்திருந்தாலும் பெருமளவிலான தேவையை சமாளிப்பது சிரமமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

2009 எச்1என்1 தொற்றுநோய் பரவிய காலத்தைப் போல், பணக் கார நாடுகள் தடுப்பூசி வழங்குவதை ஏகபோக உரிமையாக்குவதற்கான சாத்தியம் உள்ளதாகப் பார்க்கப்படுவதால், ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைப்பது பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது.