ஹாங்காங்கில் 80 பேருக்கு தொற்று

ஹாங்காங்கில் 80 பேருக்கு தொற்று

1 mins read
ffc5bfc9-683b-4037-8112-96d2e43fa339
ஹாங்காங்கில் உள்ள லைட் ரயில் நிலையத்தில் இருந்து முகக்கவசத்துடன் வெளியேறும் பயணிகள். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்காங்: ஹாங்காங்கில் நேற்று புதிதாக 80 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. பன்னிரண்டு நாட்களில் அங்கு ஒரே நாளில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 100க்கும் குறைவாக பதிவாகி இருப்பது இதுவே முதன்முறை. ஹாங்காங்கில் அண்மையில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. மாலை ஆறு மணிக்குப் பிறகு உணவுக் கடைகளில் உணவருந்த அனுமதியில்லை.