தென்கொரியாவில் வெள்ளம்

சோல்: தென்­கொ­ரி­யா­வில் தொடர்ந்து பெய்து வரும் கன­மழை­யால் ஏற்­பட்ட வெள்­ளத்­தால் ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­டோர் வீடு­களை இழந்து தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

தாழ்­வான இடங்­களில் வசிப்­போர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். வெள்­ளத்­தில் 13 பேர் மாண்­ட­தா­க­வும் மேலும் 13 பேரைக் காண­வில்லை என்­றும் மத்­திய பேரி­டர் மற்­றும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­கான தலை­மை­ய­கம் நேற்று தெரி­வித்­தது. பரு­வ­நிலை மாற்­றத்­தால் வரும் நாட்­களில் மேலும் கன­மழை பெய்­யக்­கூ­டும் என­வும் அந்த அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.

நிலச்­ச­ரிவு, வாக­னம் வெள்­ளத்­தில் அடித்­துச் சென்ற சம்­ப­வங்­க­ளால் மர­ணம் நிகழ்ந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சோல் நக­ரில் உள்ள முக்­கி­ய­மான பெரு­வி­ரை­வுச் சாலை­யின் ஒரு பகு­தி­யும் 5.75 ஹெக்­டேர் (14,211 ஏக்­கர்) பரப்­ப­ள­வுள்ள ஒரு பண்­ணை­யும் வெள்­ளத்­தில் மூழ்­கி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இறந்த 13 பேரில் ஆறு பேர் கெயோங்கி வட்­டா­ரத்­தின் மலைப்­பகு­தி­யில் உள்ள தற்­கா­லி­கக் குடி­யி­ருப்­பில் தங்­கி­யி­ருந்­த­வர்­கள் என்று யோன்­ஹாப் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. காணா­மல் போன 13 பேரில் 60 வயது ஆட­வர் ஒரு­வர் வாக­னத்­து­டன் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­டார் என நம்­பப்­ப­டு­கிறது.

இது தொடர்­பாக தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜே-இன் அதி­கா­ரி­க­ளு­டன் அவ­சர ஆலோ­ச­னைக் கூட்­டம் ஒன்றை நடத்­தி­னார். தேசிய மற்­றும் வட்­டார அள­வில் உள்ள அதி­கா­ரி­களை மேலும் உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­டாத வகை­யில் முழு­மூச்­சாக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

சோல் நக­ரின் நடுப் பகு­தி­யில் ஓடும் ஹான் ஆற்­றில் வெள்­ளம் கரை­பு­ரண்டு ஓடு­வ­தால் அப்­ப­கு­தி­யைச் சுற்­றி­யுள்ள சாலை­கள், மேம்­பா­லங்­கள் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­ன.

போக்­கு­வ­ரத்து சமிக்ஞை விளக்­கு­களும் போக்­கு­வ­ரத்து கட்­ட­மைப்­பும் பெரும் அள­வில் சேத­ம­டைந்­துள்­ளன.

அவற்றை அப்­பு­றப்­படுத்தி சரி­செய்­யும் பணி­யில் ஊழி­யர்­கள் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர் என்று யோன்­ஹாப் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

வெள்­ளத்­தால் சேத­ம­டைந்­த­வற்றை சரி­செய்­யும் பணி­யில் காவல்­து­றை­யி­னர், தொண்­டூ­ழி­யர்­க­ள் என 25,000க்கு மேற்­பட்­டோர் ஈடு­பட்­டுள்­ள­னர்.

தென்­கொ­ரி­யா­வின் அண்டை நாடான வட­கொ­ரி­யா­வி­லும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­படும் வாய்ப்பு உள்­ள­தாக அந்­நாட்­டின் ஊட­கம் எச்­ச­ரித்­துள்­ளது. வட­கொ­ரி­யா­வி­லும் பல இடங்­களில் கன­மழை பெய்­துள்­ள­தாக அந்த ஊட­கம் தெரி­வித்­தது. முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக வட­கொ­ரியா, தனது எல்­லை­யில் உள்ள அணை­யைத் திறந்­து­விட்­ட­தா­க­வும் அது­கு­றித்து தென்­கொ­ரி­யா­வுக்­குத் தெரி­யப்­ப­டுத்­த­வில்லை என்­றும் பெயர் வெளி­யி­டப்­ப­டாத வட­கொரிய அர­சாங்க வட்­டா­ரம் தெரி­வித்­த­தாக யோன்­ஹாப் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!