ஆப்கான் சிறையில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்; 29 பேர் பலி; 335 கைதிகளைக் காணவில்லை

ஜலா­லா­பாத்: ஆப்­கா­னிஸ்­தா­னின் ஜலா­லா­பாத்­தின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள சிறைச்­சாலை ஒன்­றில் ஐஎஸ்­எஸ் தீவி­ர­வா­தி­கள் மேற்­கொண்ட தாக்­கு­த­லில் 29 பேர் கொல்­லப்­பட்­ட­னர். 50 பேர் படு­கா­ய­ம­டைந்து மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

நூற்­றுக்­க­ணக்­கா­னோ­ரைக் காண­வில்லை என்று நங்­கர்­ஹர்ம்ா­வட்ட ஆளு­நர் அலு­வ­ல­கத்­தின் பேச்­சா­ளர் திரு அட்­டா­வுல்லா குகி­யானி தெரி­வித்­துள்­ளார். பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­கும் சிறைக் கைதி­க­ளுக்­கும் இடையே நடந்த சண்­டை­யைத் தொடர்ந்து தீவி­ர­வா­தி­கள் இந்­தத் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

இந்­தத் தாக்­கு­த­லில் ஐஎஸ்­எஸ், தலி­பான் தீவி­ர­வா­தி­கள் மற்­றும் உள்­ளூர் குற்­ற­வா­ளி­கள் சில­ரும் ஈடு­பட்­ட­தாக அந்­தப் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

இந்­தத் தாக்­கு­த­லைத் தொடர்ந்து சிறை­யில் இருந்த கைதி­களில் பெரும்­பா­லா­னோர் தப்­பித்து ஓடி­னர்.

அவர்­களில் 1,025 பேரை பாது­காப்­புப் படை­யி­னர் பிடித்து மீண்­டும் சிறை­யில் அடைத்­த­னர். 335 பேரைக் காண­வில்லை. அவர்­கள் தப்­பி­யோடி இருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டு­கிறது.

தாக்­கு­த­லில் சிறைக்­கை­தி­கள், பாது­காப்­புப் படை­யைச் சேர்ந்­தோ­ரு­டன் பொது­மக்­களில் சில­ரும் கொல்­லப்­பட்­ட­னர். ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த இந்த சம்­ப­வத்­தில் சிறைச்­சாலை­யின் முகப்­பில் ஒரு காரை வெடிக்­கச்­செய்து தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அதைத் தொடர்ந்து அங்கு பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த காவ­லர்­கள் மீது துப்­பாக்­கிக்­கா­ரர்­கள் சர­மா­ரி­யாக சுட்­ட­னர்.

இதில் ஏறக்­கு­றைய 30 தீவி­ர­வா­தி­கள் ஈடு­பட்­ட­தாக ஆப்­கா­னிஸ்­தா­னின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சோஹ்­ரப் கதாரி கூறி­னார். இப்­போது அந்த நக­ரில் ஊர­டங்கு விதிக்­கப்­பட்டு சிறப்­புப் போலிஸ் படை கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!