'சீன செய்தியாளர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பினால் தக்க பதிலடி தரப்படும்'

1 mins read
55268fba-ecff-4690-9cf2-a919e333752f
ஹாங்­காங்­கில் உள்ள குளோ­பல் டைமஸ் நாளி­த­ழின் ஆசி­ரி­யர் ஹு ஸிஜின். படம்: புளூம்பெர்க் -

‌ஷங்­காய்: அமெ­ரிக்­கா­வில் உள்ள சீன செய்­தி­யா­ளர்­களை அமெ­ரிக்கா வலுக்­கட்­டா­ய­மாக திருப்பி அனுப்­பி­னால் அதற்கு சீனா தக்க பதி­லடி கொடுக்­கும் என்று ஹாங்­காங்­கில் உள்ள குளோ­பல் டைமஸ் நாளி­த­ழின் ஆசி­ரி­யர் ஹு ஸிஜின் நேற்று தெரி­வித்­தார்.

அமெ­ரிக்­கா­வில் பணி­பு­ரி­யும் சீன செய்­தி­யா­ளர்­க­ளின் விசாவை அமெ­ரிக்கா புதுப்­பிக்க மறுத்து வரு­கிறது.

இவ்­வாறு நெருக்­க­டிக்கு ஆளா­கும் செய்­தி­யா­ளர்­களை அமெ­ரிக்­காவை விட்டு வெளி­யேற உத்­த­ர­விட சீனா ஆயத்­த­மாகி வரு­கிறது.

இந்­நி­லை­யில் சீனச் செய்­தி­யா­ளர்­கள் அமெ­ரிக்­கா­வில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டால் அதற்­குப் பதி­லடி தரும் வகை­யில் ஹாங்­காங்­கில் உள்ள அமெ­ரிக்­கச் செய்­தி­யா­ளர்­களுக்கு சீனா விசா கொடுக்க மறுக்கக்கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.