செய்திக்கொத்து (உலகம்) 5-8-2020

சீனாவில் 36 புதிய தொற்றுச் சம்பவங்கள்

‌ஷங்காய்: சீனாவில் நேற்றுமுன்தின நிலவரப்படி 36 புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களில் ஆறு பேர் வெளியூர் சென்று வந்தவர்கள். அவர்களில் 21 பேரிடம் நோய்த்தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்றைய முந்தைய நாள் நிலவரப்படி சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,464 ஆக இருந்தது என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்தது. இறந்தோர் எண்ணிக்கை 4,634 என்பதில் மாற்றம் இல்லை.


பாக்தாத்தில் உச்ச வெப்பம்

பாக்தாத்: ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் வெப்ப நிலை 52 டிகிரி செல்சியசைத் தொட்டது. எப்போதும் இல்லாத வகையில் பாக்தாத் உச்ச வெப்ப நிலையைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2016ல் ஈராக்கின் பஸ்ரா நகர் 53 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கொண்டிருந்தது. வெப்பத்தாலும் கொரோனா கிருமித் தொற்று அச்சத்தாலும் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானில் 130,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொவிட்-19: வியட்னாமில் 7வது மரணம்

ஹனோய்: வியட்னாமில் கொரோனா கிருமித்தொற்றால் ஏழாவது ஆள் ஒருவர் பலியானதை அந்நாட்டின் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. மாண்ட 62 வயது பெண்மணியான அவர் ஏற்கெனவே சிறுநீரகக் கோளாற்றால் அவதிப்பட்டு வந்தார். ஜூலை 18ஆம் தேதி டனாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜூலை 26ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று தவிர்த்து வேறு சில நோய்களையும் கொண்டிருப்போர் உயிரிழக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஞுயென் டுருவோங் சொன் கூறினார். வியட்னாமில் இதுவரையில் 652 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது 271 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இந்தோனீசியாவில் 1,922 புதிய கிருமித்தொற்று; 82 மரணங்கள்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று 1,922 புதிய கொரோனா கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள­தாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அங்கு இதுவரையிலும் மொத்தம் 115,056 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,388 பேர் பலியாகி விட்டனர்.


பிலிப்பீன்ஸில் மீண்டும் முடக்க நிலை

மணிலா: பிலிப்பீன்ஸ் நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மணிலாவிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மீண்டும் முடக்கநிலையை அந்நாடு அறிவித்துள்ளது. இப்பகுதிகளில் மொத்தம் 27 மில்லியன் பேர் வசித்து வருகின்றனர். நேற்று தொடங்கிய இந்த முடக்கநிலை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். நேற்று மட்டும் 3,226 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்தது. இதுவரையிலும் அங்கு 106,330 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,104 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!