இலங்கையில் தேர்தல்; இன்று நள்ளிரவில் முடிவு தெரியும்

இலங்கையில் தேர்தல்; இன்று நள்ளிரவில் முடிவு தெரியும்

1 mins read
eee9fd27-81d7-40a4-a69c-4b7c646a5db1
இலங்கையின் வீரவிளா என்னும் இடத்தில் உள்ள வாக்குச்சவாடிக்கு வாக்களிக்கச் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா. படம்: ராய்ட்டர்ஸ் -

கொழும்பு: உல­கம் முழு­வ­தும் கொரோனா கிரு­மித்­தொற்று மிக வேக­மா­கப் பரவி வரும் நிலை­யில், இந்­தி­யா­வின் அண்டை நாடு­களில் ஒன்­றான இலங்­கை­யில் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­கான வாக்­குப்­பதிவு நேற்று நடைபெற்­றது.

இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 8 மணி முதலே வாக்கு எண்­ணும் பணி­கள் தொடங்­கும் என்­றும் நள்­ளி­ர­வுக்­குள் முடிவு தெரிந்­து­வி­டும் என்­றும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

ஒரு கோடியே 60 லட்­சம் பேர் வாக்களிக்க இருந்த இந்த தேர்­த­லில் மகிந்தா ராஜ­பக்சே தலைமையிலான இலங்கை பொது­ஜன பெர­முன, ரணில் விக்­ர­ம­சிங்கே தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி, சஜித் பிரே­ம­தா­ச­வின் ஐக்­கிய மக்­கள் சக்தி ஆகிய மூன்று முக்கிய கட்­சி­கள் போட்­டி­யி­ட்டுள்ளன.

இலங்­கை­யில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகம் குறைந்துவிட்­டா­லும் சமூக இடை­வெளி, முகக்­க­வ­சம் அணி­வதை வாக்­கா­ளர்­கள் கடைப்பிடிக்க வும் அறிவுறுத்தப்­பட்­டி­ருந்­தது.