கொவிட்-19 தொற்று: 15 நொடிக்கு ஒருவர் மரணம்

கொவிட்-19 தொற்று: 15 நொடிக்கு ஒருவர் மரணம்

2 mins read
88fdaf0a-5bd1-4c66-9b2d-8f8b725da891
உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த கொரோனா கிருமித்தொற்று முதன்முதலில் உருவான இடமான சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் உள்ள வூஹான் நகரம். இங்கு புதிதாக இரண்டு தற்காலிக மருத்துவமனைகள் இரண்டே வாரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பழைய மருத்துவமனையில் இருந்த நோயாளியை புதிய தற்காலிக மருத்துவமனைக்கு மாற்றுகின்றனர் இந்த மருத்துவ ஊழியர்கள். படம்: இபிஏ -

வாஷிங்­டன்: அமெ­ரிக்கா, பிரே­சில், இந்­தியா மற்­றும் மெக்­சிகோ நாடு­களில் கொரோனா தொற்­றால் உயி­ரி­ழப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்­துக் கொண்டே இருக்­கும் நிலை­யில், உல­க­ள­வில் கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 700,000ஐ தாண்­டி­யது.

கடந்த இரண்டு வார தக­வல்­க­ளின்­படி, ஒவ்­வோர் 24 மணி நேரத்­திற்­கும் சரா­ச­ரி­யாக 5,900 பேர் பலி­யா­வ­தாக ராய்ட்­டர்ஸ் கணக்­கீடு கூறு­கிறது.

அதா­வது ஒவ்­வொரு 15 நொடிக்­கும் ஒரு­வர் மாண்­டு­போ­வ­தாக கூறு­கிறது ராய்ட்­டர்ஸ் புள்­ளி­வி­வ­ரம். 18.4 மில்­லி­யன் பேர் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர்.

கிரு­மித்­தொற்­றின் தற்­போ­தைய மைய­மாக இருக்­கும் அமெ­ரிக்­கா­வும் லத்­தீன் அமெ­ரிக்­கா­வும் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்டு வர­மு­டி­யா­மல் தடு­மாறி வரு­கின்­றன.

உல­கின் மற்ற நாடு­க­ளை­விட லத்­தீன் அமெ­ரிக்­கா­வில், கொரோ­னா­வின் தாக்­கம் தாம­த­மா­கவே தொடங்­கி­யது.

என்­றா­லும் அந்த வட்­டா­ரத்­தில் நில­வும் வறுமை மற்­றும் நெரி­சல் மிக்க நக­ரங்­கள் கார­ண­மாக கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த அதி­கா­ரி­கள் போராடி வரு­கின்­ற­னர்.

மேலும் அங்­குள்­ள­வர்­களில் பல­ரும் முறை­சாரா துறை­யில் வேலை செய்­கின்­ற­னர். அங்கு சமூ­கப் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்பிடிப்­ப­தற்­கான வாய்ப்பு குறை­வா­கவே உள்­ள­தால் வேக­மாக கிருமி பர­வு­கிறது.

லத்­தீன் அமெ­ரிக்கா மற்­றும் கரீ­பிய நாடு­களில் சுமார் 100 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் சேரிப் பகு­தி­களில் வசிப்­ப­தா­கக் கூறு­கிறது ஐநா.

இன்­னோர் பக்­கம் பணக்­கார நாடு­களில் ஒன்­றாக இருக்­கும் அமெ­ரிக்­கா­வும் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த போராடி வரு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் சுமார் 4.85 மில்­லி­யன் பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர், மாண்­டோர் எண்­ணிக்கை 160,000ஐ நெருங்­கு­கிறது.

அமெ­ரிக்­கா­வின் தொற்­று­நோய் நிபு­ணர் மருத்­து­வர் ஆண்­டனி ஃபாசி, இலை­யு­திர்ப் பரு­வ­கால காய்ச்­சல் பரு­வத்­திற்கு முன்­னர் கொரோனா தொற்­றுப் பர­வு­வ­தைக் குறைக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­னார்.

இதற்­கி­டையே, கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­த­தாக தோன்­றிய சில நாடு­களில், ­தொற்று மீண்­டும் தலைதூக்­கி­யுள்­ளது கொரோ­னா­வுக்கு எதி­ரான போராட்­டம் தற்­போ­தைக்கு ஓயாது என்­ப­தைக் கூறு­வ­தாக உள்­ளது.