வெள்ளத்தால் திணறும் தென்கொரியா

சோல்: வெள்ளம் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொரோனா தொற்றுக்கு எதிராக பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் முயற்சியில் தென்கொரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

42 நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக தென்கொரியாவில் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சுமார் 15 பேர் பலியாகினர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உடற்பயிற்சிக்கூடங் களிலும் சமூக மையங்களிலும் அமைக்கப்பட்ட தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளனர் என்றும் அங்கு கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்குள்ளவர்களின் உடல் வெப்பநிலை உள்ளிட்ட கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதைக் குறிப்பிட்ட இடைவெளியில் சோதிக்க மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon