சுடச் சுடச் செய்திகள்

ஆஸ்திரேலியா முழுவதும் கிருமித்தொற்று பரவும் அச்சம்

சிட்னி: கிருமித்தொற்­றின் இரண்­டா­வது அலை ஆஸ்­தி­ரே­லியா முழு­வ­தும் பர­வும் அச்­சு­றுத்­தல்

நில­வு­வ­தால், பெரும்­பா­லான பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களை மூடு­வ­தற்கு அந்­நாடு தயா­ராகி வரு­கிறது.

குழந்தைப் பரா­ம­ரிப்பு மையங்­களை மூடு­வது மற்­றும் கொரோனா நோயா­ளி­க­ளுக்­குச் சிகச்சை அளிக்­கும் வித­மாக மருத்­துவ வளங்­களை விடு­விப்­ப­தற்­காக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அறுவை சிகிச்­சைக்­கான தடையை விரி­வு­ப­டுத்­து­வது ஆகி­யவையும் அதில் அடங்­கும் என்று விக்­டோ­ரி­யா மாநிலத் தலை­வர் டேனி­யல் ஆண்ட்­ரூஸ் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, விக்­டோ­ரி­யா­வில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்குத் தடை விதித்­தி­ருந்த குயின்ஸ்­லாந்து மாநி­லம், தற்­போது நியூ சவுத் வேல்ஸ் மற்­றும் கேன்­பரா பய­ணி­க­ளுக்­கும் சனிக்­கி­ழமை முதல் தடை விதிப்­ப­தாக அதன் தலை­வர் தெரி­வித்தார்.

குயின்ஸ்­லாந்­தில் இரண்டு மாதங்­க­ளாக சமூக பர­வல் இல்­லாத நிலை­யில், தற்­போது மூன்று சமூ­கப் பர­வல் கிரு­மித்­தொற்றுச் சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்­பட்­டு

உள்­ள­தை­ய­டுத்து இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதோடு ஆஸ்திரேலியாவில் கிரு­மித்­தொற்­றால் ஒரே நாளில் மேலும் 15 பேர் மாண்­ட­னர். இது அந்­நாட்­டின் ஆக அதிக அன்­றாட பலி எண்­ணிக்­கை­யா­கும். இவை விக்­டோ­ரியா மாநி­லத்­தில் நிகழ்ந்­தவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மெல்­பர்­னில் நேற்று 725 கிருமித்

­தொற்றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. நியூ சவுத் வேல்­சில் புதிதாக 12 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon