சீனாவை அலட்சியப்படுத்திய பொம்பியோ

வாஷிங்டன்: அமெரிக்க சுகாதார அமைச்சர் அலெஸ் அஸார் தைவான் செல்வதற்கு சீனா கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ளது.
சீனாவின் ஒரு பகுதியே தைவான் என சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கு அமெரிக்க அமைச்சரின் பயணம் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் சீனாவின் ஆட்சேபணையை தூசுபோல தட்டி உதறிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, அலெஸ் அஸாரின் பயணத்தைத் தற்காத்து பேசியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னைய கொள்கைக்கு ஏற்ப அஸாரின் பயணம் அமைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் தகவல்கள் சீனாவுக்கு கிடைப்பதைத் தடுக்கும் பல நடவடிக்கைகளையும் மைக் பொம்பியோ வெளியிட்டார்.
“அமெரிக்க அமைச்சர்கள் ஏற்கெனவே தைவானுக்குப் பலமுறை சென்றுள்ளனர்.

“தற்போது திரு அஸார் ஒரு முக்கிய நோக்கத்திற்காக அங்கு செல்கிறார். நாம் இன்னமும் கொவிட்-19 கிருமிப் பரவல் பிரச்சினையில் சிக்கியிருக்கிறோம்.

“இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் தைவான் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.
“இதனால் உலக சுகாதார ஆலோ சனைக் கூட்டத்தில் தைவான் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். இதை சீனா தடுத்துவிட்டது,” என்று திரு பொம்பியோ சொன்னார்.

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தைவானுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் அமெரிக்க அமைச்சரவை உறுப்பினர் திரு அஸார். தைவானில் கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிராகப் போராடும் சுகாதார நிபுணர்களையும் முன்கள ஊழியர்களையும் அவர் சந்தித்துப் பேசவிருக்கிறார். தைவான் அதிபர் டிசார் இங்-வென், வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ ஆகியோரையும் அவர் சந்திக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!