இலங்கை தேர்தல்: பெரும் தோல்வியை எதிர்நோக்கும் ஐக்கிய தேசிய கட்சி

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியை எதிர்நோக்குகிறது. அதற்கு எதிராகப் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்திக் கட்சி பெருமளவிலான வாக்குகளைப் பெற்று வருவதாக இதுவரை வெளிவந்துள்ள முடிவுகள் குறிப்பிடுகின்றன.

இன்று மாலை 5.00 மணிக்கு  வெளிவந்த தகவலின்படி பெரும்பாலான இடங்களில் ஐக்கிய தேசிய கட்சி நான்காவது இடத்தில் உள்ளது.  இலங்கை பொதுஜன முன்னணிக் கட்சி 68 விழுக்காடு வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது.

இதுவரையில் அனுரகுமர திசநாயக வழிநடத்தும் தேசிய மக்கள் சக்திக் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்காவுடனான தலைமைத்துவப் போட்டியில் தோற்றதை அடுத்து அவர் அக்கட்சியை விட்டு வெளியேறி தம்முடன் வெளியேறிய சில உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியைத் தொடங்கினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon