சான் ஃபிரான்சிஸ்கோ: சீனாவுடன் தொடர்புடைய 2,500க்கும் மேற்பட்ட யூடியூப் ஒளிவழிகள் அகற்றப்பட்டதாக நேற்று பிரபல கூகல் நிறுவனம் தெரிவித்தது. காணொளிப் பகிர்வு தளத்தில் தவறான தகவல்களை வழங்கும் காணொளிகளை அகற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை இடம் பெற்றதாக அது கூறியது.
அரசியல் அல்லாத காணொளிகள் என்று தெரிவிக்கப்பட்டாலும் சிறிய அளவில் அரசியலைத் தொடும் வகையில் இருந்தன என்று கூகல் தெரிவித்தது. காணொளி களின் விவரங்களை அது வெளியிடவில்லை. சீனாவில் உள்ள தூதரகம் இதற்கு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
வெளிநாட்டு நடிகர்கள் விதைக்கும் தவறான தகவல்கள் அமெரிக்க அரசியலில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில்கூட ரஷ்ய அரசாங்க ஆதரவு நபர்கள் நூற்றுக்கணக்கானப் பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி அமெரிக்க அரசியலில் தலையிட்ட தாகக் கூறப்படுகிறது.

