சுடச் சுடச் செய்திகள்

கனடியருக்கு சீனாவில் மரண தண்டனை

பெய்ஜிங்: சீனாவில் போதைப் பொருள் உற்பத்தி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த சூ வெய்ஹோங்குக்கு அந்நாட்டின் குவாங்ஷோவ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கின் மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. சீனாவில் 2019ல் கனடாவைச் சேர்ந்த ராபர்ட் லாய்ட், ஃபான் வெய் ஆகியோருக்கு  போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை அளிக்கப்பட்டது. 

2018 டிசம்பரில் மைக்கேல் கொவ்ரிக் மற்றும் மைக்கல் ஸ்பாவோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon