பிலிப்பீன்சுக்கு ரஷ்ய தடுப்பூசி

1 mins read
07fc6bcd-09b5-4bad-a62d-2cd1d09eb577
மணிலாவின் நவோடாஸ் நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கொரோனா சோதனைக்காக சளி மாதிரியைச் சேகரிக்கும் மருத்துவத்துறை ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

மணிலா: பிலிப்பீன்சுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.

பிலிப்பீன்சில் உள்ள உள்ளூர் நிறுவனத்துடன் சேர்ந்து தடுப்பூசிகளைத் தயாரிக்கவும் தயாராக இருப்பதாக மணிலாவுக்கான ரஷ்யத் தூதர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசிக்கு இம்மாதம் அந்நாட்டின் ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முன்கள சுகாதார ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்படும் என்று கூறப்படுகிறது.

"பிலிப்பீன்சுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்கத் தயாராக இருக் கிறோம்," என்று மெய்நிகர் காணொளியில் பேசிய ரஷ்யத் தூதர் இகோர் கோவாவ் கூறினார்.