இரா. சம்பந்தன்: புதிய அரசுடன் சேர்ந்து இலக்கை அடைவோம்

கொழும்பு: பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சிஅமைக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெர்முன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சே தலைமையில் அமையும் புதிய அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படத் தயாராக இருக்கிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை அன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோயிலில் சிறப்பு பூசைகள் நடைபெற்றன.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இரா.சம்பந்தன், “இதை ஒரு நேர்மையான தேர்தலாக நான் கருதவில்லை, மக்களுக்கு பணம் கொடுக்கப் பட்டது, நன்கொடை கொடுக்கப் பட்டது, மதுபானம் கொடுக்கப்பட்டது. இவற்றின் மூலம் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது,” என்றார்.

“சிறிய, சிறிய கட்சிகள் போட்டி யிட்டதால் வாக்குகள் பிரிக்கப் பட்டது. இருந்தாலும் இளையர்கள் உட்பட பலரது கடுமையான உழைப்பினால் ஒன்பது இடங்களில் வெற்றி பெற்று உள்ளோம். இதை ஒரு பெரிய வெற்றியாக கருது கிறோம். ஆனால் நிரந்தர அமை தியை ஏற்படுத்த நீதியும் கெளரவ மான பிரஜையாக வாழ தீர்வும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். புதிய அரசின் நிலைப்பாட்டை கொண்டு எமது இலட்சி யத்தை அடைவோம்,” என்று இரா.சம்பந்தன் கூறினார்.

இதற்கிடையே தேர்தலில் சிறை யில் இருந்தவாறே இரண்டு பிர முகர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் பிள்ளையான் எனும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதே போன்று சிறையில் இருந்தவாறே முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு உறுப்பினர் ஆகியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!