கொழும்பு: அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகள் உடனடியாக இடம்பெறாது என்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்து உள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்றதும் அரசியலைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்யும் என பரவலாகக் கூறப்பட்டது.
ஆனால் அரசியலமைப்பு சட்டத்தில் முழுமையாக மாற்றுவது அல்லது 19வது திருத்தத்தை மாற்றுவது உடனடியாக மேற்கொள்ளப்படாது என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் அரசியலமைப்பில் மாற்றம் தேவை என்பதையே காட்டுகிறது என்று திரு பீரிஸ் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு மாற்றங்களை செய்வதற்கான பலம் அரசாங்கத்துக்கு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க 19வது திருத்தம் தடையாக இருந்தது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின்படி, நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட பிறகு நான்கரை வருடங்களுக்குப் பிறகே அதனை கலைப்பதற்கான அதிகாரம் அதிபருக்கு உள்ளது.

