நான்காவது முறையாக பிரதமராகிய ராஜபக்ச

நான்காவது முறையாக பிரதமராகிய ராஜபக்ச

1 mins read
b5bcd1a8-8f5f-4432-b892-22e15e83c977
-

இலங்கையில் சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜ்பக்சே பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார். இலங்கையின் 28ஆவது பிரதமரான ராஜபக்சே நன்காவது முறையாக இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இம்மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திரு ராஜ்பக்சேவின் இலங்கை பொதுஜன கட்சி (எஸ்எல்பிபி) கிட்டத்த மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி அரசாங்கத்தை அமைத்துள்ளது.

இந்நிலையில் சீனப் பிரதமர் லீ கெ சியாங் திரு ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். சீனாவும் இலங்கையும் பாரம்பரியமிக்க நட்புறவைக் கட்டிக்காப்பதாகக் கூறிய திரு லீ, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வ பங்காளித்துவம் வேகமாக மேம்பட்டிருப்பதாகவும் பல்வேறு துறைகளில் இந்த கூட்டுறவு ஆழமானதாகவும் அகலமானதாகவும் குறிப்பிட்டார். இந்த இரு நாடுகளுமே கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிராக ஒன்றாக போராடுவதாகவும் அவர் கூறினார்.

புதிய நாடாளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதி கூடும் என்று இலங்கையின் அதிபரும் திரு ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ச அறிவித்தார்.