மலேசியா, இந்தியா உறவில் விரிசல் ஏற்பட காரணம்: மகாதீர் விளக்கம்

மலேசியா, இந்தியா உறவில் விரிசல் ஏற்பட காரணம்: மகாதீர் விளக்கம்

1 mins read
34ad32a6-27a0-4746-8da0-93ba67dd6107
-

இந்தியாவுடனான மலேசியாவின் உறவு பாதிக்கப்பட காஷ்மீர் பிரச்சினை குறித்து தாம் தெரிவித்த கருத்துகளே காரணம் என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். அண்மைய பேட்டியில், தாம் இரண்டாவது முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்றதும் உடனுக்குடன் வாழ்த்து தெரிவித்த பிற நாட்டுப் பிரதமர்களில் மோடியும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் விவகாரம் குறித்து மட்டும் தாம் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் உலகளவில் சில தவறுகள் நடக்கும்போது அவை குறித்தும் தாம் பேசியிருப்பதாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார்.