நியூசிலாந்து: உள்ளூர் கிருமிப் பரவல் இல்லாத 100வது நாள்

1 mins read
604c567d-8e1d-4556-bbcc-c0a75bb38338
-

வெலிங்டன்: நியூசிலாந்திற்கு உள்ளூர் கிருமிப் பரவல் இல்லாத 100வது நாளாக அமைந்தது ஞாயிற்றுக் கிழமை. என்றாலும் அதற்காக தன்னிறைவு அடைந்ததுவிடக் கூடாது என்று நியூசிலாந்து எச்சரித்துள்ளது.

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நியூசிலாந்து மக்கள், இப்போதெல்லாம் பரிசோதனை செய்துகொள்ள மறுப்பது, தொடர்பு தடமறிதல் செயலியைப் பயன்படுத்தாதது, அடிப்படை சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றாதது கவலை அளிப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.