சுடச் சுடச் செய்திகள்

எண்ணெய் கசிவு: மொரிஷியசில் அவசர நிலை

தோக்கியோ: ஜப்பானியர் ஒருவருக்குச் சொந்த மான எம்.வி.வாகஷியோ என்ற கப்பலிலிருந்து இந்தியப் பெருங்கடலின் மொரிஷியஸ் கடற்பரப் பில் எண்ணெய் கசியத் தொடங்கியதையடுத்து  மொரிஷியஸ் அரசாங்கம் சுற்றுச்சூழல் அவசரகால நிலையை அறிவித்தது. 

இந்தக் கப்பல் ஜூலை 25ஆம் தேதியன்று மொரிஷியஸ் கடற்பகுதியில் பாறை ஒன்றில் மோதி நின்றதாகவும் அதன் பின் விரிசல் ஏற்பட்டு எண்ணெய் கசியத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

கப்பலிலிருந்த 4,000 டன் எண்ணெயில் 1,000 டன் கடலில் கலந்துவிட்டதாகவும் 500 டன் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மொரிஷியஸ் அரசாங் கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் கடற் பரப்பில் கலந்த எண் ணெய்யை அகற்றுவதற்கு உதவ முன் வந்துள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon