மகிந்த ராஜபக்சே பதவியேற்பு

மகிந்த ராஜபக்சே பதவியேற்பு

1 mins read
5c698abb-d909-42bc-a7f7-83cbbb60d10e
இலங்கை பிர­த­ம­ராக நான்­கா­வது முறை­யா­கப் பத­வி­யேற்­றுள்­ளார் மகிந்த ராஜ­பக்சே. 71 விழுக்­காடு குடி­மக்­கள் வாக்­க­ளித்த இந்­தத் தேர்­தல்­தான் இலங்­கை­யில் இது­வரை நடை­பெற்ற மிக அமை­தி­யான தேர்­தல் எனக் கரு­தப்­ப­டு­கிறது. ஆகஸ்ட் 20ஆம் தேதி இலங்கை நாடா­ளு­மன்­றம் கூடும் என அதி­பர் கோத்­த­பய அறி­வித்­துள்­ளார். படம்: இபிஏ -

கொழும்பு: இலங்கை பிர­த­ம­ராக மகிந்த ராஜ­பக்சே நேற்று பத­வி­யேற்­றுக் கொண்­டார்.

கொழும்பு அருகே உள்ள புத்தர் கோவி­லில் பத­வி­யேற்பு நிகழ்வு நடை­பெற்­றது.

தமது இளைய சகோ­த­ர­ரும் இலங்கை அதி­ப­ரு­மான கோத்­த­பய ராஜ­பக்சே முன்­னி­லை­யில் பத­வி­யேற்றார் மகிந்த. அவரது கட்சி, அண்­மை­யில் நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் மொத்­த­முள்ள 225 தொகு­தி­களில் 145 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ளது.

அவ­ரது தலை­மை­யி­லான அமைச்­ச­ரவை அடுத்த வாரம் பதவி­யேற்­கும் எனத் தெரி­கிறது.