சுடச் சுடச் செய்திகள்

‘மர்மமான முறையில் கிருமிப் பரவல்’

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் தொற்­றுக்கு ஆளா­னது எப்­படி என்­ப­தைக் கண்­டு­பி­டிக்க முடி­யாத நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து கொண்டே வரு­வ­தாக அம்­மா­நில முதல்­வர் டேனி­யல் ஆண்ட்­ரூஸ் கூறி­யுள்­ளார்.

விக்­டோ­ரி­யா­வில் நேற்று புதி­தாக 394 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­னர். அது முந்தைய வாரத்­தின் அன்­றாட சரா­ச­ரி­யான 400-500ஐவிட சற்று குறை­வா­கும்.

என்­றா­லும் தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 174 பேருக்­குக் கிரு­மி தொற்­றி­யது எப்­படி என்­பது மர்­ம­மா­கவே உள்­ளது.

இது முன்னைய நாள் எண்­ணிக்­கை­யான 130ஐவிட அதி­கம். மர்­ம­மான முறை­யில் தொற்­றுக்கு ஆளா­னோர் எண்­ணிக்கை விக்­டோ­ரி­யா­வில் தற்­போது 2,758ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இது­த­விர மேலும் 17 பேர் மாண்­ட­தை­ய­டுத்து அம்­மா­நி­லத்­தில் பலி­யா­னோர் எண்­ணிக்கை 210 ஆகி­யது.

விக்­டோ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை குறை­யத் தொடங்­கி­யி­ருந்­தா­லும் உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

இரவு நேர முடக்­கம், அத்­தி­யா­வ­சி­ய­மற்ற வர்த்­த­கங்­கள் மூடல் போன்ற கடு­மை­யான கட்­டுப்­பாட்­டு­க­ளால் கிரு­மிப் பர­வல் ஓர­ளவு கட்­டுக்­குள் இருந்­தா­லும், சிலர் எப்­படி கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­னர் என்­ப­தைக் கண்­டு­பி­டிக்க முடி­யாத நிலை இருப்­ப­தால், நிலைமை தொடர்ந்து சவா­லா­கவே இருப்­ப­தாக விக்­டோ­ரியா முதல்­வர் ஆண்ட்­ரூஸ் கூறி­னார்.

மேலும் பேசிய அவர், “விக்­டோ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் மூலம், குறைந்­தது ஒரு­வர் தொற்­றுக்கு ஆளா­கி­றார்.

“இதை குறைக்க வேண்டும். அதாவது ஒவ்­வோர் மூன்­றா­வது அல்­லது நான்­கா­வது நப­ருக்கு இன்­னொ­ரு­வர் தொற்­றுக்கு ஆளா­கும் வகை­யில் நிலைமை மேம்­படும்போது­தான் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை பாதி­யாக குறை­யும். அதற்கு சற்று காலம் எடுக்­கும்,” என்று சொன்­னார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் நேற்று 10 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

விக்டோரியாவில் பாதிக்கப்படுவோர் குறைவு, உயிரிழப்போர் அதிகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon