பெய்ரூட்: அரசாங்க அலுவலகங்கள் சூறையாடல்

பெய்ரூட்: அரசாங்க அலுவலகங்கள் சூறையாடல்

1 mins read
cf94bb66-b41f-404c-97c5-1959987a7ef3
பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு சம்பவம், அந்நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கையை மேலும் அதிகரித்துஉள்ளதால், அங்கு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. படம்: இபிஏ -

பெய்­ரூட்: நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளின் உயி­ரைப் பலி வாங்­கிய பெய்­ரூட் வெடிப்பு சம்­ப­வத்­திற்கு லெப­னான் அர­சாங்­கத்­தின் அலட்­சி­யமே கார­ணம் என்று கூறி அந்­நாட்டு மக்­கள் பலர் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில் நேற்­று­முன்

தினம் நடந்த ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது பெய்­ரூட்­டி­லுள்ள அர­சாங்க அலு­வ­ல­கங்­கள் சூறை­யா­டப்பட்டன.

பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் ஒன்று திரண்டு வெளி­யு­றவு, எரி­சக்தி, பொரு­ளா­தார அமைச்­சு­க­ளின் அலு­வ­ல­கங்­களை முற்­று­கை­யிட்டு சேதப்­ப­டுத்­தி­னர்.

அப்­போது தங்­க­ளைத் தடுக்க முயன்ற போலி­சார் மீதும் ஆர்ப்­பாட்­ட­க்­கா­ரர்­கள் கல்­வீச்­சி­ல் ஈடு­

ப­ட்டதால், சூழ்­நி­லையைக் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரும் வித­மாக அவர்­கள் மீது கண்­ணீர் புகை குண்­டு­கள் வீசப்­பட்­டன. சில இடங்­களில் துப்­பாக்­கிச்­சூ­டும் நடத்­தப்­பட்­டது.

அப்­போது ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­

க­ளால் துரத்­தப்­பட்ட போலிஸ்­கா­ரர் ஒரு­வர் மின்­தூக்­கியின் சுழல் தண்டுக்குள் சிக்கி மாண்­டார்.

இதற்கிடையே ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வதைத் தொடர்ந்து, இந்த வெடிப்பு சம்­ப­வம் தொடர்­பாக தொலைக்­காட்சி வாயி­லாக நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­றிய லெப­னான் பிர­த­மர் ஹசன் தியாப், இந்த குழப்­ப­மான சூழ்­நி­லை­யி­லி­ருந்து வெளி­வர முன்­கூட்­டியே தேர்­தலை நடத்த அழைப்பு விடுத்­துள்­ளார்.

பெய்­ரூட் நகரின் கிடங்கு ஒன்றி ­லி­ருந்த 2,000 டன்­க­ளுக்­கும் அதி­க­மான அ­மோ­னி­யம் நைட்­ரேட் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெடித்­த­தில் 158 பேர் மாண்­ட­னர், 6,000த்திற்­கும் அதி­க­மா­னோர் காய­ம­டைந்­த­னர்.