பிரேசிலில் 4 மாதத்தில் நூறாயிரம் பேர் பலி

பிரே­சி­லியா: பிரே­சி­லில் முதல் கொரோனா தொற்று கண்­ட­றி­யப்பட்ட 4 மாதங்­களில் சுமார் நூறா­யி­ரம் பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கிவிட்டனர். அங்க ஒவ்­வோர் நாளும் சரா­ச­ரி­யாக ஆயி­ரம் பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இது­கு­றித்து பிரே­சி­லின் சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­கம் கூறு­கை­யில், “கொரோனா தொற்­றுக்­குப் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை ஒரு லட்­சத்­தைக் கடந்­துள்­ளது. பரி­சோ­தனை எண்­ணிக்­கையை அதி­கப்­ப­டுத்­தா­தது, மக்­கள் சுகா­தார விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­தது அதிக உயி­ரி­ழப்­புக்­குக் கார­ண­மா­கும்,” எனத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

ஆனால், மருத்­துவ வல்­லு­நர்­களும் அறி­வி­யல் ஆய்­வா­ளர்­களும், “மருத்­து­வக் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு அரசுத் தரப்­பி­லி­ருந்தே போது­மான ஒத்­து­ழைப்பு இல்லை.

“ஊர­டங்கு முறை­யாக நடைமுறைப்­ப­டுத்­தப்­ப­டா­மல் விரை­வாக மக்­கள் இயல்பு வாழ்க்­கைக்கு வந்து­விட்­டார்­கள்,” எனக் கவ­லைத் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, பிரே­சி­லில் கொரோ­னா­வில் ஒரு லட்­சம் பேர் உயி­ரி­ழந்­தார்­கள் என்­பது மிகமிகக் குறைவு என்­றும் உண்­மை­யான தக­வல்­களை அரசு மறைப்­ப­தா­க­வும் பிரே­சில் தன்­னார்­வ­லர்­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.

உல­க­ள­வில் பாதிப்பு, உயி­ரி­ழப்பு என இரண்­டி­லும் பிரே­சில் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது.

முத­லி­டத்­தில் உள்ள அமெ­ரிக்­கா­வில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 5 மில்­லி­ய­னைத் தாண்­டி­யது, 165,000த்திற்கும் மேற்பட்டோர் உயி­ரி­ழந்­த­னர்.

இந்­தியா 3வது இடத்­தில் உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!