சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்கர்கள் 11 பேருக்குத் தடை விதித்தது சீனா

பெய்ஜிங்: ஹாங்காங் மீதான சீனாவின் ஒடுக்குமுறை தொடர்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக் கும் விதமாக அமெரிக்க செனட்டர்கள் மார்கோ ரூபியோ மற்றும் டெட் க்ரூஸ் உட்பட 11 அமெரிக் கர்களுக்கு சீனா இன்று தடை விதித்தது.

“ஹாங்காங் விஷயத்தில் மோசமாக நடந்துகொண்டவர்களுக்குத் தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது,” என்றார் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர்.

மனித உரிமைகள் கண்காணிப்பு இயக்குநர் கென்னத் ரோத், ஜனநாயகத்திற்கான தேசிய எண்டோமென்ட் தலைவர் கார்ல் கெர்ஷ்மனும் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். 

ஹாங்காங் தலைவர் கேரி லாம் உள்ளிட்ட மூத்த சீன அதிகாரிகள் 10 பேரின் சொத்துகளை அமெரிக்கா சென்ற வாரம் முடக்கியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon