லெபனான் அரசாங்கத்திற்கு எதிராக வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

லெபனான் அரசாங்கத்திற்கு எதிராக வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

1 mins read
c89f7eb4-023c-419f-95d2-142ffdfbbb34
படம்: ராய்ட்டர்ஸ் -

158 பேரின் உயிரைப் பலிவாங்கிய லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் அந்நாட்டின் ஆளும் அரசுக்குக் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு பிரதமர் ஹசன் பதவி விலகக் கோரி மக்கள் பெய்ரூட் நகரின் சாலைகளில் ஆர்ப்பாட்டங்களி

லும் வன்முறைகளிலும் ஈடுபட்டனர். அப்போது கட்டடங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர். இந்நிலையில், லெபனான் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மானல் அப்டெல் சமாத் பதவி விலகியுள்ளார். மக்களைப் பாதுகாக்க லெபனான் அரசு தவறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த திங்களன்று லெபனான் வெளியுறவுத்துறை அமைச்சர் நசீப் ஹிட்டி பதவி விலகியதைத் தொடர்ந்து தற்போது மற்றுமோர் அமைச்சர் பதவி விலகியுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்