சுடச் சுடச் செய்திகள்

ஹாங்காங் ஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது

ஹாங்­காங்: ஹாங்­காங் ஊட­கத் துறை அதி­பர் ஜிம்மி லாய் (படம்) வெளி­நாட்டு சக்­தி­க­ளு­டன் கூட்டு சேர்ந்து நாட்­டுக்கு எதி­ராக சதி செயல்­களில் ஈடு­பட்­ட­தா­கக் கூறி சீனா­வின் தேசியப் பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­டார்.

ஆப்­பிள் டெய்லி நாளி­தழ் மற்­றும் நெக்ஸ்ட் சஞ்­சி­கை­யின் உரி­மை­யா­ள­ரான 71 வயது ஜிம்மி லாய் ஹாங்­காங்­கில் ஜன­நா­ய­கத்தை வலி­யு­றுத்­தி­யும் சீனா­வின் சர்­வா­தி­கார ஆட்­சி­யை­ தொடர்ந்தும் விமர்­சித்து வந்­தார். ஹாங்­காங் மக்­கள் நடத்தி வந்த தொடர் போராட்­டத்­துக்­கும் ஆத­ரவு தெரி­வித்­து ­இருந்­தார். தன்னை ஒரு பிரச்சி­னைக்­கு­ரிய நபர் என சீனா கரு­து­வ­தா­க­வும் சிறைக்குச் செல்ல தான் தயா­ராக இருப்­ப­தா­க­வும் அவர் ஏற்­கெ­னவே கூறி­யி­ருந்­த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon