அதிபர் புட்டின்: கொவிட்-19 மருந்துக்கு ரஷ்யா அங்கீகாரம்

அதிபர் புட்டின்: கொவிட்-19 மருந்துக்கு ரஷ்யா அங்கீகாரம்

1 mins read
66073bae-3f56-4018-8e35-4fde70a3dcad
இம்மாதம் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் படம் ரஷ்யாவின் ஆய்வு நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொவிட்-19 தடுப்பூசியைக் காட்டுகிறது. படம்: ஏஎஃப்பி -

மாஸ்கோ: ரஷ்யா, உலகிலேயே முதல் நாடாக கொவிட்-19 தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் அளிக்க இருக்கிறது என்று அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்தார்.

மனிதர்களின் உடலில் அந்த மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டு இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில் மாஸ்கோவுக்கு பெரும் வெற்றி கிடைத்து இருக்கிறது என்றும் இது ரஷ்யாவின் அறிவியல் ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

புதிய மருந்து எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக, ஆற்றல்மிக்கதாக இருக்கும் என்பதை முடிவு செய்ய இறுதிகட்ட மருந்தகச் சோதனைகள் நடந்து வருகின்றன. இருந்தாலும் கொவிட்-19ல் இருந்து ரஷ்ய நாட்டினர் விடுதலையாக இந்த மருந்து பெரும் வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.