ஜப்பான் வெளியுறவு அமைச்சர் சிங்கப்பூர் வருகை

1 mins read
8c7a8fc4-22e3-4457-8b28-ec5616b8dde7
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடிகி. படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்கியோ: ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடிகி மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இன்று சிங்கப்பூர் வருகிறார்.

கொவிட்-19 காரணமாக சிங்கப்பூர் எல்லையில் பல கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்த பிறகு இங்கு வரும் முதலாவது உயர் நிலை அமைச்சர் இவரே ஆவார்.

சிங்கப்பூர் தலைவர்களை ஜப்பானிய அமைச்சர் சந்திப்பார் என்று ஜப்பானின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.