தைவானில் முன்னாள் அதிபருக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க அமைச்சர் அஸார்

தைப்பே: தைவானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அஸார் அந்நாட்டின் காலஞ்சென்ற முன்னாள் அதிபருக்கு அஞ்சலி செலுத்தினார். ஜனநாயகப் பாதையில் தைவான் பயணிப்பதற்காக முன்னாள் அதிபர் லீ டெங்-ஹுய் ஆற்றிய பங்கை அவர் பாராட்டினார்.

திரு அலேக்ஸ் அஸார் மூன்று நாள் பயணத்தின் கடைசி நாளான நேற்று அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். சீனா கடுமையாக ஆட்சேபித்தும் அதை பொருட்படுத்தாமல் அலெக்ஸ் அஸார் தை வானுக்கு வருகையளித்தார்.

இதனால் ஏற்கெனவே வர்த்தகம், ராணுவம், பாதுகாப்பு, மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க-சீன உறவு மேலும் மோசமடைந்தது.

நேற்று கடந்த மாதம் 97வது வயதில் மரணமடைந்த லீயின் நினைவிடத்துக்குச் சென்ற அஸார், அங்குள்ள நினைவுப் புத்தகத்தில் தமது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.

“அதிபர் லீ வகுத்துக்கொடுத்துள்ள ஜனநாயகப்பாதை அமெரிக்க-தைவான் உறவை முன்னெடுத்துச் செல்லும்,” என்று அமைச்சர் அஸார் தெரிவித்தார்.

1949 முதல் தைவான் தன்னாட்சி யுடன் செயல்பட்டாலும் சுதந்திர நாடாக இதுவரை அது பிரகடனப் படுத்திக்கொள்ளவில்லை.

சீனாவும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon